திருச்சியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு!!

திருச்சியில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறப்பு!!

திருச்சி மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என வியாபாரிகள் அறிவிப்பு விடுத்துள்ளனர்.

திருச்சியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, கடைக்காரர்களின் நலன் கருதி, நாளை (29ம் தேதி) முதல், காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்படும் என்று திருச்சி மளிகை மண்டி, ஆயில் & வெல்லம், சர்க்கரை வியாபாரிகள் சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டு போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள 168 மொத்த வியாபார கடைகள் மட்டுமே காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை செயல்பட உள்ளது. இங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு போக்குவரத்து மற்றும் இதர காரணங்களால் வர இயலாத சூழ்நிலையில் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக காந்தி மார்க்கெட் பகுதி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement
Advertisement