திருச்சி மாநகரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது - 77 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

திருச்சி மாநகரில் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டவர் கைது - 77 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் (51)என்பவரை தனிப்படை அமைத்து கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 77 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். 

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அனைத்தும் புகாரின் அடிப்படையில் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில், கோட்டை காவல் நிலையத்தில் நடைபெற்றது. சுமார் 40 லட்சம் மதிப்பிலான 77 இருசக்கர வாகனங்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர், இருசக்கர வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படுவதன் மூலம் இது போன்ற வாகன திருட்டை தவிர்க்கலாம் என்றும்,  திருச்சி மாநகரத்தில் 1030 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. அதேபோன்று 5,000 முதல் 7,000 வரையிலான சிசிடிவி கேமராக்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பெருவாரியான குற்றங்கள் தடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை உடனடியாக கண்டறிய படுகிறார்கள் என்று தெரிவித்தார்.