திருச்சியில் பூப்பந்தாட்ட போட்டி; தமிழகம் முழுவதும் 27 அணிகள் பங்கேற்பு:

திருச்சியில் பூப்பந்தாட்ட போட்டி; தமிழகம் முழுவதும் 27 அணிகள் பங்கேற்பு:

ஆர்.ஜே.ஜே.எஸ் பூப்பந்தாட்ட கழகம் நடத்தும் தமிழ்நாடு மாநில அளவிலான மூத்தோர் மற்றும் சீனியர் அல்லாதோர் ஆடவர் ஐவர் பூப்பந்தாட்ட போட்டி திருச்சி ஆரோக்கிய மாதா மெட்ரிக் பள்ளியில் இன்று தொடங்கியது.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த போட்டியில் ஐவர் மட்டுமே பங்கேற்று விளையாட முடியும். 5 மைதானங்கள் அமைக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுவதுடன், தமிழகம் முழுவதும் இருந்து 27 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஐந்து பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுவதுடன், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்பட்டு நாளையதினம் காலிறுதி போட்டிகள் சூப்பர் லீக் முறையில் நடைபெறும், இதில் வெற்றி பெறுபவர்கள் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் பங்கேற்பர், அதேநேரம் காலிறுதிப் போட்டியில் தோல்வி மணிகள் 5ஆவது முதல் ஒன்பதாவது இடங்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு பரிசுகள், கோப்பையும் வழங்கப்படும். இப்போட்டியினை ஏராளமானோர் கண்டு ரசித்து வருகின்றனர்.