பன்றிக்காக சிறுவன் கொடூர கொலை: திருச்சியில் பயங்கரம்:

பன்றிக்காக சிறுவன் கொடூர கொலை: திருச்சியில் பயங்கரம்:

அரியமங்கலம் குப்பைக் கிடங்கின் சுற்றுச் சுவரை இடித்துவிட்டு பன்றிகளை மேய்ப்பதற்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வரும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது மகன்கள்.பன்றி மேய்க்க சிறுவர்களை வற்புறுத்தும் அவலம் .

திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் அலியார், பகுர் நிஷா இவர்களது மகன் அப்துல் வாஹித்(12) இவன் ஆறாம் வகுப்பு இடை நின்றவன்.
இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மாலை வீட்டில் இருந்து சென்ற அப்துல் மீண்டும் வீடு திரும்பவில்லை, அவரது தாய் மற்றும் உறவினர்கள் இரண்டு நாட்களாக தேடி வந்து உள்ளனர். எங்கும் தேடி அப்துல் வாஹித் கிடைக்காததால், இதுகுறித்து அவரது தாய் 6ம் தேதி அரியமங்கலம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவரது தாய் பகுர் நிஷா அரியமங்கலம் போலீசாரிடம் அதிமுக பிரமுகர் கயல்விழி சேகரின் மகன் முத்துக்குமாரும், இளவரசனும்  பன்றி மேய்க்க சொல்லி ஏற்கனவே தனது மகனை அடித்துள்ளனர். எனவே அவர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக முத்துக்குமாரை பிடித்து போலீஸார் நடத்திய விசாரணையின்போது அவர் கூறியதாவது… எனது அண்ணன் (பெரியப்பா பையன்)சிலம்பரசன் எங்களுடைய பன்றியை அடிக்கடி பிடித்து விற்பனை செய்து வந்தான். அவனுக்கு அப்துல் வாகித் உதவி செய்ததாகவும், குறிப்பாக எங்கள் பன்றி எங்கே நிற்கிறது என வேவு பார்த்து அவன் கூறினான்… அதனால் தான் சிறுவனை மிரட்ட என் கூட்டாளிகளை அவனை பிடித்து அடிக்க சொன்னேன் என்றார். இதனையடுத்து முத்துக்குமாரின் கூட்டாளிகளான  இளவரசன்(18), சரவணன்(19), லோகேஷ் (16), வீராச்சாமி(16) ஆகிய 4 பேரும் அடித்த பொழுது சிறுவன் இறந்துள்ளார். சிறுவனின் உடலை பன்றி கொட்டகைக்கு பின் உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கு பகுதியில் குப்பைகள் தீ பிடித்தால் அணைக்க பயன்படும் 15 அடி  ஆழ பயன்பாட்டில் இல்லாத குப்பைகள் நிறைந்த தொட்டியில் கல்லைக் கட்டி உள்ளே போட்டதாக   தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சரவணனை போலீசார் அழைத்து வந்து அரியமங்கலம் குப்பைக்கிடங்கு பகுதியில் எங்கு புதைத்தார் என்று கேட்டு இடத்தை காண்பித்த பின்,திருச்சி அரசு மருத்துவர் ஜூலி வனஜா(பிரேத பரிசோதனை) மற்றும் காவல் உதவி ஆணையர் மணிகண்டன் முன்னிலையில் உடலைத் தேடினர். கிட்டத்தட்ட 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு தீயணைப்புத் துறையினர் உதவியுடன் சிறுவனின் உடலை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்ட அப்துல் வாஹித்

பன்றிக்காக 12 வயது சிறுவனை அடித்து துன்புறுத்தி கொலைசெய்து  இருப்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. போலீசார் இதை முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்றும், அதிமுக பிரமுகரான கயல்விழி சேகருக்கும், சேகரின் அண்ணன் மகன் இருவருக்குமிடையே பன்றிகளை வளர்ப்பதிலும் பிரிப்பதிலும் பல வருடங்களாக தகராறு நடைபெற்றுள்ளது. தற்போது  கயல்விழி சேகரின் மகன்கள் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து 12 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இந்த கொலைச் சம்பவம் குறித்து அரியமங்கலம் போலீசார் ஆளும் கட்சி பிரமுகரான கயல்விழி சேகரின் மகன்கள் முத்துக்குமரன் மட்டும் இளவரசனின் பெயரை சேர்க்காமல் வீராச்சாமி, லோகேஷ், சரவணன், கணேசன் ஆகிய 4 பேரை கைது செய்து உள்ளனர்.  எனவே உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சட்ட விரோதமாக செயல்படும் பன்றி கொட்டகையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்