மொபைல் செயலி மூலம் பரப்புரை: திருச்சி ஊராட்சி மன்ற தேர்தலுக்கு போட்டியிடும் பெண் மருத்துவர்;

மொபைல் செயலி மூலம் பரப்புரை: திருச்சி ஊராட்சி மன்ற தேர்தலுக்கு போட்டியிடும் பெண் மருத்துவர்;

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது மக்களிடம் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. நவீன காலத்தில் ஆன்ராய்டு செல்போன் இல்லாதவர்களே இல்லை என்றாகிவிட்டது.இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முதல் முறையாக திருச்சியில் வாக்குகளை சேகரித்து வருகிறார் ரம்யா என்ற பெண் மருத்துவர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இயன்முறை மருத்துவ படிப்பை முடித்து 32 வயதான ரம்யா கிருஷ்ண திருச்சி சமுத்திரம்
ஊராட்சி மன்ற தலைவி பதவிக்கு வேட்பாளராக களத்தில் இறங்கியுள்ளார். திருமணமாகி இருக்கும் இவர் மிகவும் சுறுசுறுப்பாக தன்னுடைய தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் .இவருடன் சேர்த்து ஒன்பது பேர் களத்தில் வேட்பாளர்கள் உள்ளனர்.

Advertisement

பொதுவாக தேர்தல் திருவிழா என்றாலே வேட்பாளர்கள் நோட்டீஸ்கள் ,ஆட்டோ பிரச்சாரம், சுவர் விளம்பரம் என பல முறைகளை கையாண்டு வருபவர்களுக்கு மத்தியில் இவர் ஒரு புதிய செயலியை உருவாக்கி உள்ளார்.அந்த செயலிக்கு பெயரே தீர்வு என பெயரிட்டு தான் ஊராட்சி மன்ற தலைவியாக பொறுப்பேற்ற உடன் அந்த செயலி மூலம் தன்னுடைய பகுதியில் உள்ள வாக்காளர்கள் நேரடியாக அந்த செயலி மூலம் தங்களது குறைகளை பதிவு செய்யலாம் .ஊராட்சி மன்ற தலைவரிடம் நேரில் சந்தித்து தான் குறைகளை தெரிவிக்க வேண்டும் என்பதில்லை . கிருஷ்ண சமுத்திரம் பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்கள் எந்த நேரமும் செயலியை பயன்படுத்தி தகவலை பதிவிடலாம். 12530 வாக்காளர்களை கொண்ட கிருஷ்ண சமுத்திரம் பகுதியில் ஒவ்வொருவரையும் சந்தித்து செயலியை காண்பித்து நவீன தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் இளம்வயது இயன்முறை மருத்துவர் ரம்யா . முதலில் மக்களுக்கும் ஊராட்சி மன்ற தலைவிக்கும் உள்ள தொடர்பு இடைவெளியை குறைக்க இந்த முறையை கையாண்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மற்ற வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் பல தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்தாலும் முக்கியமாக தன்னுடைய கிருஷ்ண சமுத்திரக்குட்பட்ட பகுதியில் உள்ள பொது இடங்களில் ஆக்கிரமித்து வைத்துள்ள அவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு பொதுமக்களுக்கு தேவையான கட்டிடங்களை கட்டி தரவும் அதேபோல் குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றவும் முன்னுரிமை அளிப்பேன் என்ற வாக்குறுதியுடன் வாக்குகளை சேகரித்து வருகிறார்.

எது எப்படி இருந்தாலும் மொபைல் யுகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் புதிய யுக்திகளை மக்களிடம் கொண்டு சென்று கவர்ந்து வெற்றி வாகை சூட முயற்சிக்கின்றனர்.