கட்சியை கலைத்து விட்டு பாஜகவிலா? நடிகையுடன் தன்னை ஒப்பிடுவதா - திருச்சியில் கருணாஸ் பேட்டி!

கட்சியை கலைத்து விட்டு பாஜகவிலா? நடிகையுடன் தன்னை ஒப்பிடுவதா   -  திருச்சியில் கருணாஸ் பேட்டி!

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தாரநல்லூர் கீரக்கடை பகுதியில் வைக்கப்பட்டிருந்த  பசும்பொன்  முத்துராமலிங்க தேவர் புகைப்படம் தாங்கிய பலகை மர்மநபர்களால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேதப்படுத்தப்பட்டது. அதனை முக்குலத்தோர் புலி படை தலைவர் கருணாஸ் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கருணாஸ்,

"முக்குலத்தோர் புலிப்படை சார்பில் தேவர் திருவுருவப்படம் சேதமடைந்த தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இப்பகுதியில் உள்ள முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று  காவல்துறையிடம் கேட்டுக் கொண்டதையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.

முக்குலத்தோர் பெருவாரியான மக்கள் தொகை கொண்ட சமுதாயமாக இருந்தாலும் திராவிட கட்சிகளை சார்ந்தே உள்ளது.ஆனால் தற்போது உள்ள முக்குலத்தோர் இளைஞர்கள் தங்களுக்கென தனி தலைமையும் அங்கீகாரமும் வேண்டும் என விரும்பிகிறார்கள். சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பதா தனி சின்னத்தில் போட்டியிடுவதா என்பது குறித்து மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம்.

Advertisement

அ.தி.மு.க வின் முதலமைச்சர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு என்னுடைய  வாழ்த்துக்கள்.

பாராளுமன்றத்தில் மருதுபாண்டியர் சிலை நிறுவ வேண்டும் என்றும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும்,
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  கள்ளர், மறவர், அகமுடையோரை  ஒருங்கிணைத்து தேவர் என  வெளியிட்ட அந்த அரசாணையை மத்திய, மாநில அரசு உடனடியாக நடைமுறைப்படுத்தி, உள் இட ஒதுக்கீடை முக்குலத்தோர் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்ட கருணாஸ் இதுதொடர்பாக பாரத பிரதமரிடம் முக்குலத்தோர் புலிப்படை வலியுறுத்த உள்ளதாகவும் தெரிவித்தார்.நான் கட்சிய கலைத்து பாஜகவில். சேரவிரும்பவில்லை.என்னால் கேட்காமல் சிலர் பத்திரிக்கை சுதந்திரம் என்ற பெயரில்  ஜனநாயக விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்.தன்னை நடிகையுடன் ஒப்பிடகூடாது.அவர் பாஜகவில் சேர்ந்தால் தன்னையும் சேர்ப்பது தவறு என்றார்.

எந்த சூழ்நிலையிலும் முக்குலத்தோர் புலிப்படை கலைக்கப்படாது, எந்த ஒரு அரசியல் அமைப்புடன்  இணைக்கப்படாது என உறுதியாக தெரிவித்த கருணாஸ்
 முக்குலத்தோர் சமுதாய மக்களுக்காக போராட தமது  அமைப்பு உறுதுணையாக இருக்கும் என்றார்.
மேலும் 
நடிகர் சங்க தேர்தல் வழக்கில்  நீதியரசர்கள் விலகிய நிலையில், புதிதாக நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த தேர்தல் மனசாட்சியின் படி நீதிமன்ற உத்தரவின் பேரில் வாக்குகள் எண்ணப்பட வேண்டும் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க  வேண்டும் என்றார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் நீண்ட நாள் உடனிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அனைத்து அரசியல் நகர்வுகளில்  முக்கிய  பங்காற்றியவர்  சசிகலா. இது நாடறிந்த உண்மை. ஆனாலும் 
அவர்களின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட்டு கருத்து சொல்வது சரியாக இருக்காது.
 முக்குலத்தோர் அமைப்பைச் சார்ந்தவர் என்ற அடிப்படையில் சசிகலாவிற்கு  என்றென்றும் முக்குலத்தோர் புலிப்படை உறுதுணையாக இருக்கும் என்றார்.

 2021 தேர்தல் வெற்றியை மக்கள்தான் தீர்மானிப்பார்கள், குடிமராமத்து போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய அதிமுக மீது பத்தாண்டுகள் எந்த ஒரு வெறுப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை மக்கள் விரும்பும் ஆட்சியை தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்தார்.