புத்தூர் மீன் மார்க்கெட்டில் மின்கம்பத்தில் தவறி விழுந்த மாநகராட்சி ஊழியர்!

புத்தூர் மீன் மார்க்கெட்டில் மின்கம்பத்தில் தவறி விழுந்த மாநகராட்சி ஊழியர்!

திருச்சி புத்தூர் அருகே இயங்கி வந்த மீன் மார்க்கெட் அருகாமையில் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், மருத்துவமனைகள் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணமே இருந்தன. இதனைத் தொடர்ந்து மாநகராட்சி கோ-அபிஷேகத்திற்கு உட்பட்ட உரையூர் 60வது வார்டு குழுமணி பிரதான சாலையில் லிங்கா நகர் காசி விளங்கி பகுதியில் 3.32 கோடியில் புதிய மீன் மார்க்கெட் வணிக வளாகம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று இந்த புதிய மீன் மார்க்கெட் திறக்கும் நிலையில் புத்தூர் பகுதியில் இருந்த பழைய மீன் மார்க்கெட்டில் மின்சாரம் துண்டிக்கும் பணி நடைபெற்று வந்தது. இதில் மாநகராட்சி மின் ஊழியரான உறையூரைச் சேர்ந்த ஜீவானந்தம் (48) மின்கம்பத்தில் பணி செய்து கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார்.

உடனடியாக ஊழியர்களும் போலீசாரும் முதலுதவி அளித்த பின்னர் காயமடைந்த அவரை அருகிலுள்ள திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.