திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் தொடங்கியது வாக்கு எண்ணும் பணி:

திருச்சி மாவட்டத்தில் 14  ஒன்றியங்களில் தொடங்கியது வாக்கு எண்ணும் பணி:

இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை 14 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட்ட பகுதிகளில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் துவங்கியது. திருச்சி மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் வாக்கு எண்ணும் பணியில் 5235 மேற்பட்ட அலுவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தல் மேற்பார்வையாளர் கணேஷ் IAS ஆய்வு…

வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைந்தால் அவர்கள் காவல்துறை மூலமாக கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வாக்கு என்னும் மையங்கள் அனைத்தும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கப்படுகின்றனர். வாக்குச்சாவடி மையத்துக்கு வரும் தேர்தல் அலுவலர்கள் போட்டியிடும் வேட்பாளர்கள் அவர்களின் ஏஜெண்டுகள் உட்பட உள்ளே நுழையும் அனைவரும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்படுகிறார்கள்.வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லது தேர்தல் முகவர் மற்றும் புகைப்படத்துடன் கூடிய உரிய அனுமதி பெற்று வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்..

திருச்சி மாவட்டத்தில் 404 கிராம ஊராட்சி தலைவர் பதவிகளுக்கும், 3,408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும்,  241 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சியின் 24 உறுப்பினர் பதவிகளுக்கும் என 4077 பதவிகளுக்கு தேர்தல் 2- கட்டமாக 2275 வாக்கு மையங்களில் தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் எண்ணிக்கை என்று பார்த்தால் திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக 6 ஒன்றியங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 76. 18 சதவீதமும்,

தயாராக உள்ள தபால் வாக்குகள்…

அதிமுக, திமுக, மற்றும் பிற கட்சிகள் சுயேச்சைகள் என மொத்தம் 8953 களத்தில் போட்டியிட்டனர் இதில் அன்னபோஸ்ட் ஆக 614  வெற்றி பெற்றனர். இரண்டாம் கட்டமாக 8 ஒன்றியங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் 78.43 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.