குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்:

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம்:

நிலமும் மதமும் மனிதனை விழுங்கும் ஒரு துயரமான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.நாடுகளைப் பிடிக்கும் ஆசையில் எல்லா நாடுகளும் மற்ற நாடுகளின் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இது ஒருபுறமிருக்க 1955 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தின் படி 11 ஆண்டுகளாக இந்தியாவில் வசிக்கும் பிறதேச மக்களை இந்தியர்களாக ஏற்றுக்கொள்ளமுடியும்.

ஆனால் தற்போது ஆளும் பாஜக அரசினர் கொண்டு வந்திருக்கும் திருத்தங்கள் பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது.
நாடு முழுக்க மாணவர்களையும், மனித உரிமை ஆர்வலர்களையும் கொதிப்படைய செய்திருக்கிறது இச்சட்டத் திருத்தம்.இது சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட சட்டம் என எதிர்க்கட்சிகள் இதனை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்த நிலையில் திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தம் மசோதாவை கண்டித்து 1000க்கும் மேற்பட்ட திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில்
கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்