திருச்சியில் விவசாயிகள் வெங்காய பயிர்களை மாலையாக அணிந்து அரை நிர்வாண போராட்டம்:

திருச்சியில் விவசாயிகள் வெங்காய பயிர்களை மாலையாக அணிந்து அரை நிர்வாண போராட்டம்:

விவசாயிகளிடமிருந்து கிலோவுக்கு 50 ரூபாய் விலை நிர்ணயம் செய்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் வெங்காய பயிர்களை மாலையாக அணிந்து அரை நிர்வாண போராட்டம் – போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வெங்காய விலை உயர்வைக் கண்டித்தும், இடைத்தரகர்கள் மட்டுமே வெங்காய விலை உயர்வினால் அதிக லாபம் ஈட்டுவதாகவும், விவசாயிகளிடமிருந்து கிலோவுக்கு 50 ரூபாய் விலை நிர்ணயம் செய்து வெங்காயத்தை கொள்முதல் செய்ய வலியுறுத்தியும், வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் அச்சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வெங்காய பயிர்களை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு அரை நிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.போராட்டத்தின் போது
போராட்டத்தில் ஈடுபட்ட துவரங்குறிச்சியை சேர்ந்த நாச்சியம்மாள் என்பவர் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அவருக்கு முதலுதவி செய்யப்பட்டது.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வாயிலில் இருந்து தேங்கியுள்ள மழை நீரையும் பொருட்படுத்தாது அரை நிர்வாணத்துடன் தரையில் உருண்டு அலுவலகத்திற்குள் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.இந்த போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.