திருச்சி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ஃபைன் - 13 லட்சம் ரூபாய் வசூல்!!

திருச்சி மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு ஃபைன் - 13 லட்சம் ரூபாய் வசூல்!!

திருச்சி மாவட்டத்தில்  இதுவரை 11,225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் 10,387 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர் எண்ணிக்கை 156 ஆக உள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய...https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. விரைவில் கொரோனா இல்லாத மாவட்டமாக திருச்சி இருக்கவேண்டுமென மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவேண்டும்,பொதுஇடங்களில் எச்சில்கள் துப்பக்கூடாது, கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும், அணியாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தது.

Advertisement

இதனையடுத்து கடந்த செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர்7-ம் தேதி வரை வாகனத்தில் மாஸ்க் அணியாமல் செல்பவர்கள், பொது இடங்களில் எச்சில் துப்புவார்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்கள் மீது 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

அதில் முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்கள் 4,822 பேரும் சமூக இடைவெளி மற்றும் பொது இடங்களில் எச்சில் துப்பியவர்கள் 429 பேர் என மொத்தம்  5, 251 பேரிடம் இருந்து 13,31,900 ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நகர்ப்புறங்களை விட அதிக அளவில் கிராமப்புறங்களில்  அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.