திருச்சி தேசிய கல்லூரி பொருளாதாரத்துறை சார்பாக கல்லூரிக்கிடையேயான போட்டிகள்:

திருச்சி தேசிய கல்லூரி பொருளாதாரத்துறை சார்பாக கல்லூரிக்கிடையேயான போட்டிகள்:

திருச்சி தேசியக் கல்லூரியின் பொருளாதாரத் துறை சார்பாக NAC ECO Meet 2020 என்கின்ற கல்லூரிக்கிடையேயான போட்டிகள் இன்று நடைபெற்றன.

இவ்விழாவில் கல்லூரி செயலர் ரகுநாதன் கல்லூரி முதல்வர் சுந்தரராமன் பொருளாதாரத்துறைத் தலைவர் இளங்கோ மற்றும் சிறப்பு விருந்தினராக திருச்சி ஈ.வே.ரா கல்லூரி புவனேஸ்வரி, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி  கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

மேலும் இவ்விழாவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ரங்கோலி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி,6 வினாடி-வினா போட்டி மற்றும் பல போட்டிகள் நடத்தப்பட்டது.

இப்போட்டியின் ஒருங்கிணைப்பாளராக பேராசிரியர் திருமாறன், டீன் ஆஃப் ஆர்ட்ஸ் ஸ்ரீதர் மற்றும் மாணவ ஒருங்கிணைப்பாளராக ரூபன் ஆகியோர் விழாவினை வழிநடத்திச் சென்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளும் ஒட்டுமொத்த பரிசைப் பெற்ற கல்லூரிக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.