"மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதல்வராக்குவதற்க்கு தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி விட்டோம்" - கே.என்.நேரு பேட்டி

"மு.க.ஸ்டாலினை தமிழ்நாட்டின் முதல்வராக்குவதற்க்கு தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி விட்டோம்" - கே.என்.நேரு பேட்டி

திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க வின் செயற்குழு கூட்டம்,  தி.மு க முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் இன்று நடைப்பெற்றது. இதில் 300 க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து திமுகவின்  முதன்மை செயலாளர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில்... திருச்சியில் முப்பெரும் விழா நடத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் இசைவு தந்துள்ளார். அந்த விழாவில் திமுக வின் மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழிகள் வழங்கப்பட உள்ளது. இதில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளனர்.

ஒவ்வொரு இயக்கமும் தேர்தல் பணியை தொடங்கி விட்டன. ஸ்டாலினை முதலமைச்சராக்குவதற்கு நாங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டோம்.அதற்கான  ஒரு முன்னோட்ட கூட்டம் தான் இது. கடலூரில் தலித் ஊராட்சி மன்ற தலைவரை தரையில் அமர வைத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதும் இது போன்ற செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. 

Advertisement

உள்ளாட்சி தேர்தலே நடத்த  முடியாமல்  இருந்த இடங்களில்,  ஸ்டாலின் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது தான் தேர்தல் நடத்தப்பட்டது. அந்த  நான்கு ஊராட்சிகளிலும்,  ஊராட்சி மன்ற தலைவராக தலித்துக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என கூறினார்