திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான விவாத போட்டி:

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான விவாத போட்டி:

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான விவாதம் “காலநிலை அவசரம்” என்கிற தலைப்பில் இன்று நடைபெற்றது. இவ்விவாதம் மாணவர்களுக்கு சிந்தனைத் தூண்டும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது தேசிய அளவிளான விவாதம் ஆகும்.

இப்போட்டியில் கலந்து கொள்வற்காக மத்திய பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள பிரபல உயர்கல்வி நிறுவனங்களிலிருந்து 3 பேர் கொண்ட குழு வீதம் 28 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு இன்று முதல்நிலை சுற்றும் இரண்டாம் நிலை சுற்றும் கல்லூரியில் நடைபெற்றது.இதனை கல்லூரியின் அதிபர் லியோனார்டு செயலர் பீட்டர் மற்றும் முதல்வர் ஆ. சேவியர் ஆரோக்கியசாமி ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.

இறுதிச் சுற்று நாளை டிசம்பர் மாதம் 6 ம் தேதி காலை 11.00 மணிக்கு கல்லூரி ஜீபிலி அரங்கில் நடைபெற உள்ளது. இதற்குத் தலைமை தாங்க திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார் ‌பேட்ரிக் ராஜ்குமார் அவர்கள் கவுரவ விருந்தினராக கலந்துக்கொள்கிறார். இவ்விழாவில் முதன்மை விருந்தினர் மரக்கன்றை நட்டு மற்றும் பத்தாயிரம் மரக்கன்றுகளை 3 மாவட்டங்கள் உட்பட்ட 86 கிராமங்களுக்கு வழங்க உள்ளார்.இப்போட்டியின் முதல்பரிசாக ரூ. 75,000 இரண்டாம் பரிசாக ரூ. 35,000 மூன்றாம் பரிசாக(2) ரூ. 15,000 என பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

நிகழ்வில் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் ஆங்கிலப் புலமை பெற்ற போராசிரியர்கள் நடுவர்களாகக் கலந்துகொள்கிறார்கள். துணைமுதல்வர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாகக் கலந்துகொள்கிறார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜான் பாலையா அவர்கள் தலைமையில் பேராசிரியர்களும் மாணவர்களும் மேற்கொள்ள உள்ளனர்.