தலையணை போர்வைகளை பயணிகளே எடுத்து வர வேண்டும் - திருச்சியில் 175 நாட்களுக்கு பிறகு பயணத்தைத் தொடங்கிய ஆம்னி பேருந்துகள்!!

தலையணை போர்வைகளை பயணிகளே எடுத்து வர வேண்டும் - திருச்சியில் 175 நாட்களுக்கு பிறகு பயணத்தைத் தொடங்கிய ஆம்னி பேருந்துகள்!!

கொரோனா தொற்று ஆரம்பமாகி 6 மாதங்கள் போனதே தெரியவில்லை. வருடத்தின் இறுதியை நெருங்கி வந்து கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் கொரோனா தொற்றால் பல மாதங்களாக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் உள்ளிட்டவை இயக்கப்படாமல் இருப்பதை எவரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டோம்.

Advertisement

இந்நிலையில் ஏழாம் கட்ட ஊரடங்கு தலைப்புகளுடன் அமலில் உள்ள நிலையில் மத்திய-மாநில அரசு விதிமுறைகளின்படி பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் இயக்க அனுமதியளித்தது. ஆனால் தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு மேலாக பேருந்தை இயக்க முடியாத பல்வேறு சூழ்நிலையில் சிக்கி தவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆம்னி பஸ்கள் இயக்கப்படுவது ஓட்டுநர்களுக்கும் ஆம்னி பேருந்து நம்பி இருந்த கிளீனர்கள், பழுது பார்ப்பவர்கள் மற்றும் நெடுந்தூர பயணத்தை நிம்மதியாகக் கழிக்க வேண்டும் என ஆம்னி பேருந்தின் பயணிகள் அனைவருக்கும் ஒருவகையில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேட்டியளித்த ஆம்னி பஸ் உரிமையாளர் மணிகண்டனிடம் பேசினோம்... "ஆறு மாதங்களுக்கு மேலாக ஆம்னி பஸ் இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஆம்னி நிறுத்தத்தில் உள்ள பேருந்துகள் அனைத்திற்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் திருச்சி, சென்னை, மதுரை, கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று இரவு முதல் பயணத்தை தொடங்க உள்ளது.

குறிப்பாக தமிழ்நாடு பாண்டிச்சேரி பதிவுசெய்யப்பட்ட பேருந்துகள் (TN, PY) இயக்கப்படவில்லை. அதற்கு பதிலாக நாகாலாந்து(NL) பதிவு செய்யப்பட்ட பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.

பேருந்தில் ஏறும் பயணிகளுக்கு முன்னதாக உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு சனிடைசர் கள் வழங்கப்பட்டு முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்குப் பிறகு பயணிகள் பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். பயணிகள் பேருந்து டிக்கெட்களை ஆன்லைன் மூலமே பெற்றுக்கொள்ளலாம். 6மாதங்களுக்கு முன்பு வசூலிக்கப்பட்டு அதே பழைய கட்டணம் தான் தற்போதும் வசூலிக்கப்படுகிறது.

பேருந்தில் பயணிக்கும் பயணிகள் வீட்டிலிருந்தே போர்வைகள், தலையணைகள் எடுத்துவர அறிவுறுத்தி உள்ளதாகவும் ஆம்னி பேருந்துகள் அனைத்தும் நான்-ஏசியில் இயக்கப்படுகிறது என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் மணிகண்டன் தெரிவித்தார்.