திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலை முயற்சி- எஸ்ஐ உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

திருச்சி காவலர் பயிற்சி பள்ளியில் திருநங்கை தற்கொலை முயற்சி- எஸ்ஐ உள்ளிட்ட இருவர் பணியிடை நீக்கம்

கடந்த 9ஆம் தேதி காவலர் பயிற்சி பள்ளியில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக கூறி திருநங்கை சம்யுக்தா என்பவர் கடந்த 9ஆம் தேதி தன் பிறந்த நாளன்று விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement

இந்நிலையில் பயிற்சி பள்ளியில் நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் உதவி காவல் ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் இரண்டாம் நிலை காவலர் இஸ்ரேல் ஆகியோரை சென்னை காவலர் பயிற்சி பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.