வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி திருச்சியில் திருநங்கைகள் தர்ணா போராட்டம்!!

வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி திருச்சியில் திருநங்கைகள் தர்ணா போராட்டம்!!

திருநங்கைகள் திருச்சி மாவட்டத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாகவும், இரவு நேரங்களில் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களிடம் வலுக்கட்டாயமாக பணம் பறிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் நேற்று இரவு காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி, இனி இதுபோல் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

Advertisement

 இந்நிலையில் இன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள சமூக நலத் துறை அலுவலகத்திற்கு வந்த 200க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தங்களுக்கு உரிய வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை, அதேபோல தங்குமிடம் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் தொடர்ந்து நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து திருநங்கைகளுக்கும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதே போல ஒரு நிரந்தர தங்கும் இடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என வலியுறுத்தினர். இதுபோல் செய்யும் பொழுது வேறு தவறான பாதைக்கு நாங்கள் செல்ல மாட்டோம் என கூறினர். 

மேலும் இதுகுறித்து சமூக நலத் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தல் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.