திருச்சி தேசியக் கல்லூரியில் தட்டச்சு பயிற்சி மையம் துவக்க விழா:

திருச்சி தேசியக் கல்லூரியில் தட்டச்சு பயிற்சி மையம் துவக்க விழா:

திருச்சி தேசியக்கல்லூரியில் இன்று 11. 30 மணியளவில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையின் சார்பாகத் தட்டச்சுப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. கல்லூரி வளாகத்திற்குள் செயல்படும் இம்மையம் மாணவர்களுக்குக் கூடுதல் பயனாக அமையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் கல்லூரியின் செயலர் கா.ரகுநாதன் அவர்கள் இப்பயிற்சி மையத்தைத் தொடங்கி வைத்தார்.மேலும் அவர் கூறுகையில்… “வல்லுநர்களைக் கொண்டு ஒவ்வொரு முறையும் 60 மாணவ மாணவியர்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில மொழித் தட்டச்சுப் பயிற்சி வழங்கி, தமிழ்நாடு அரசு நடத்தும் சான்றிதழ்த் தேர்வில் பங்கேற்கச் செய்வதே இம்மையத்தின் நோக்கம் என்றும், இதனால் ஒவ்வொரு பட்டதாரியும் கூடுதல் வேலைவாய்ப்பை பெறுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் இரா.சுந்தரராமன், கல்லூரி நூலகரும் இம்மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான த. சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் முன்னாள் நூலகர் ராகவன், துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாகப் பங்கேற்றனர்.