பிகில் திரைப்படத்தின் 50-வது நாளை ஒட்டி திருச்சியில் நலத்திட்ட உதவிகள்:

பிகில் திரைப்படத்தின் 50-வது நாளை ஒட்டி திருச்சியில் நலத்திட்ட உதவிகள்:

விஜய் நடிப்பில் வெளிவந்த திகில் திரைப்படம் பெண்களுக்கான ஒரு ஊக்கமளிக்கும் திரைப்படமாகவும் நேற்றோடு 50 வது நாளைத் தொட்டு வெற்றி திரைப்படமாகவும் உள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில் திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதி வண்டிகளும், ஏழை பெண்களுக்கு தையல் இயந்திரங்களும், தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளும் மற்றும் ஆயிரம் விதை பந்துகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் எல்.ஏ.மாரிஸ் திரையரங்க நிர்வாக இயக்குனர் ஜோசப் பிரான்சிஸ், திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் ஆர்.கே ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விழாவில் எல்.ஏ. மாரிஸ் திரையரங்கம், சோனா மீனா திரையரங்கம், கற்பகம் பிலீம்ஸ் விநியோகஸ்தர் காசிராஜன் ஆகியோருக்கு பிகில் 50வது நாள் வெற்றி விழா கேடயங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர், பொருளாளர் மற்றும் அனைத்து மாவட்ட இளைஞரணி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.