உலக பிரியாணி தினம் - 10 பைசாவுக்கும் 1 ரூபாய்க்கும் பிரியாணி - ஏமாற்றம் அடைந்த திருச்சி பொதுமக்கள்!!

உலக பிரியாணி தினம் - 10 பைசாவுக்கும் 1 ரூபாய்க்கும் பிரியாணி - ஏமாற்றம் அடைந்த திருச்சி பொதுமக்கள்!!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11ம் தேதி உலக பிரியாணி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எப்பொழுதும் பிரியாணி என்றாலே அதை விரும்பி உண்ண பெரும்பாலான மக்கள் காத்திருப்பார்கள். இந்நிலையில் உலக பிரியாணி தினத்தை சிறப்பிக்கும் வகையில், திருச்சியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில், இன்று 10 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டப்பட்டது. முதலில் வரும் நூறு நபர்களுக்கு மட்டும் பிரியாணி வழங்கப்படும் எனவும் கூறி இருந்தனர். இந்நிலையில் திருச்சி சாஸ்திரி சாலையில் கடையில் பிரியாணியின் மேல் உள்ள நாட்டத்தால் அதிக அளவிலான மக்கள் குவிந்தனர்.

 கொரோனா காலம் என்பதனை மறந்தும் அதிக அளவிலான மக்கள் அங்கு கூடினர். இருந்த போதும் அந்த உணவகம் அறிவித்தப்படி பத்து பைசா நாணயத்துடன் முதலில் வந்த 100 நபர்களுக்கு மட்டும் பிரியாணி வழங்கியது. மீதமுள்ள நபர்கள் பிரியாணி வாங்க முடியாமல் ஏமாந்து திரும்பி சென்றனர். இதே போல அந்த உணவகத்தின் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மற்றொரு கிளையில் கொரோனா முன் கள பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு ஒரு ரூபாய்க்கு இன்று பிரியாணி வழங்கப்பட்டது. 

வழக்கமாக 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் மட்டன் பிரியாணி இன்று ஒரு ரூபாய்க்கும் பத்து பைசாவுக்கும் வழங்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்பட்டது.

இது குறித்து பேசிய அந்த கடைகளின் உரிமையாளர் கே.எம்.எஸ்.ஹக்கீம்,

உலக பிரியாணி தினத்தை முன்னிட்டு நாங்கள் இந்த சலுகையை அறிவித்தோம்.இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.தரம்,சுவை,அளவு என எதையும் மாற்றாமல் பத்து பைசாவுக்கும் ஒரு ரூபாய்க்கும் இன்று பிரியாணி வழங்கினோம்.

திருச்சியில் முதன்முறையாக நாங்கள் இதை செய்துள்ளோம்.அடுத்த ஆண்டு இன்னும் சிறப்பாக இதை செயல்படுத்துவோம்.கொரோனா முன்கள பணியாளர்களுக்கு ஒரு ரூபாய்க்கு முதலில் வரும் நூறு பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தோம்.ஆனால் அதிக அளவிலானவர்கள் பிரியாணி வாங்க வந்தார்கள்.நூறு நபர்கள் தான் என அறிவித்தாலும் வந்த அனைவருக்கும் பிரியாணி வழங்கினோம் என்றார்.

ஆனால் காலை 10 மணிக்கு 100 பேர்களுக்கு மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதுகுறித்து கூறிய பொதுமக்கள் 100 பேர் மட்டுமே பிரியாணி வழங்கப்பட்டது. ஆஃபர் தருபவர்கள் 500 அல்லது 1000 பேர்களுக்கு வழங்கினால்நன்றாக இருக்கும் என்ற தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.