திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு!

திருச்சியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த, ஆழ்வார்தோப்பு பகுதியைச் சேர்ந்த 74 வயது பெண்மணி ஆமினா இன்று உயிரிழந்தார்.

நீரிழிவு நோயினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது உயிரிழந்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.