நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இளைஞர் ஒருவரை இறந்தவராக சித்தரித்து ஊர்வலமாக தூக்கி வந்து நூதன போராட்டம்!!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இளைஞர் ஒருவரை இறந்தவராக சித்தரித்து ஊர்வலமாக  தூக்கி வந்து நூதன போராட்டம்!!

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சி மரக்கடை பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தினர் 50க்கும் மேற்பட்டோர் திருச்சி மரக்கடையிலிருந்து பழைய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். அப்போது இளைஞர் ஒருவரை பிணம் போல் சித்தரித்து மாலை அணிவித்து ஊர்வலமாக தூக்கி வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Advertisement

தொடர்ந்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு இருந்த நிலையில் போராட்டக்காரர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Advertisement