கோவிலில் பூஜை செய்வதில் முறை மாற்றும் பிரச்சனை - பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் - திருச்சி அருகே பரபரப்பு!

கோவிலில் பூஜை செய்வதில் முறை மாற்றும் பிரச்சனை - பூசாரியை தாக்கிய திமுக கவுன்சிலரின் கணவர் - திருச்சி அருகே பரபரப்பு!

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த கண்ணனூரில்  இரு தரப்புக்கு இடையே  கோவிலில் பூஜை செய்வதில் முறை மாற்றும் பிரச்சினையில் திமுக கவுன்சிலரின் கணவர் பூசாரிய தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

Advertisement

துறையூரை அடுத்துள்ள கண்ணனூரில்  அங்காளபரமேஸ்வரி கோயில் உள்ளது. இந்தக் கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றாகும். இக்கோவிலுக்கு காசிராஜன் என்பவர் அறங்காவலர் குழுத் தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக இரு தரப்பு பூசாரிகளுக்கு இடையே கோவிலில் பூஜை செய்வதற்கு முறை மாற்றும் பிரச்சினையால் அறங்காவலர் குழுத்தலைவர் காசிராஜனின் மகனும் கண்ணனூர் திமுக கவுன்சிலர் பேபி என்பவரின் கணவருமான லெனின் கோவிலை மூடி பூட்டு போட்டு சென்றுள்ளார்.

இதில் எதிர்த்தரப்பு பூசாரி ஓம்பிரகாஷ்  என்பவரும்  இன்னொரு பூட்டால் கோவிலை பூட்டி  சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று கோவிலை திறந்து  ஓம்பிரகாஸ் பூஜை செய்து வந்துள்ளார். இங்கு இரண்டு மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டதால் பக்தர்களும் வந்து பூஜை செய்தனர்.

Advertisement

திடீரென பூஜை செய்து கொண்டிருந்த ஓம்பிரகாஷை  திமுக கவுன்சிலரின் கணவர் லெனின் உள்ளே புகுந்து  சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சனையால் இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜம்புநாதபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தற்போது அங்காளபரமேஸ்வரி கோயிலில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.