அரசியலுக்கான ஆர்ப்பாட்டம் அல்ல சாமானியனிக்கான போராட்டம் -கே.என்.நேரு பேட்டி:

அரசியலுக்கான ஆர்ப்பாட்டம் அல்ல சாமானியனிக்கான போராட்டம் -கே.என்.நேரு பேட்டி:

மின் கட்டணத்தை முறைப்படுத்த தி.மு.க முதன்மை செயலாளர் நேரு தலைமையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மின் கட்டண கணக்கீடுட்டை முறைப்படுத்தி திருச்சி முழுவதும் தி.மு.க வினர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது. திருச்சியில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றப்பட்டது. அலுவலகம் முன்பு அவர் தலைமையில் சட்டையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் மின் கட்டண சலுகை வேண்டும் என்ற பாதைகளை ஏந்திக்கொண்டு தி.மு.க வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தவணை முறையில் கட்டணம் வசூலிக்க வேண்டும்,மற்ற மாநிலங்களை போல் மின் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

Advertisement

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.என்.நேரு, கொரனோ காலத்தில் எந்தவித ரீடிங் எடுக்காமல் வீடுகளில் அதிகபட்ச கட்டணத்தை வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். அண்டை மாநிலங்களில் மின் கட்டண தள்ளுபடி செய்து வரும் நிலையில், தமிழகத்தில் அதிக மின் கட்டணம் வசூலிப்பது காரணமாகவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

மற்ற விஷயங்களுக்கும் அண்டை மாநிலங்களை உதாரணம் காட்டும் அரசு இதற்கு உதாரணம் காட்ட மறுக்கிறது.மக்களுக்கு முழுமையான சம்பளம் கிடைக்கப் பெறாத இந்த காலகட்டத்தில் அதிக மின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.இந்த விவகாரம் அரசியல் ஆக்கப்படவில்லை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காகவே போராட்டம் என்று தெரிவித்தார்.