கொரோனாவால் இறந்தாரா? திருச்சி எஸ்.எஸ்.ஐ!!

திருச்சி மாநகர காவல்துறையில் அரியமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ஆக பணியாற்றி வந்தவர் சன்னாசி (58). இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை கொரோனோ பரிசோதனைகள் செய்து நெகட்டீவ் வந்து சுவாச கோளாற்றிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மீண்டும் அங்கிருந்து வந்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக பரிசோதனை செய்து கொண்டார். இரண்டு முறையும் நெகட்டீவ் வந்தும் இறந்ததால் இன்றும் இவருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை. திருச்சியில் ஏற்கனவே சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்எஸ்ஐ ஒருவர் இறந்த நிலையில் தற்போது அரியமங்கலம் எஸ்.எஸ்.ஐ கொரோனா தொற்றால் தான் இறந்தாரா என்ற அச்சத்தில் திருச்சி மாநகர காவல் துறையினர் உள்ளனர். நேற்று பரிசோதனை முடிவுகளை தாமதமாக வழங்கியதால் தனியார் கொரோனா பரிசோதனை கூடத்திற்கு சீல் வைக்கப்பட்டது.இதுபோல பரிசோதனைகளை தாமதப்படுவதால் இன்னும் எத்தனை எத்தனை இழப்புகள் தான் பார்க்க நேரிடுமோ தெரியவில்லை. மாவட்ட நிர்வாகம் தனியார் பரிசோதனை கூடங்கள் உடனடியாக முடிவுகளை வெளியிட்டால் பலரை காப்பாற்ற முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கொரோனாவால் இறந்தாரா? திருச்சி எஸ்.எஸ்.ஐ!!