எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் திருச்சி ஹவுசிங் யூனிட் வணிக கட்டிடம் - பேராபத்தை தவிர்க்குமா மாவட்ட நிர்வாகம்?

எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் திருச்சி ஹவுசிங் யூனிட் வணிக கட்டிடம் - பேராபத்தை தவிர்க்குமா மாவட்ட நிர்வாகம்?

திருச்சி சாலை ரோடு பகுதியில் ஹவுசிங் யூனிட் சாலையில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழக அரசால் ஹவுசிங் யூனிட் வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.இந்த வணிக வளாகத்தில் வங்கி ஒன்றும் இந்து சமய அறநிலை துறையுடைய தணிக்கை துறை அலுவலகம் பொதுமக்களின் பொதுவிநியோக கடையும் செயல்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் இந்த வளாக கட்டிடத்தில் வழக்கறிஞர்கள் அலுவலகங்களும் இதர கடைகளும் உள்ளது.

சுமார் சராசரியாக 500 க்கும் மேற்பட்டோர் இந்த கட்டிடத்தில் தினமும் தங்களுடைய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இந்த கட்டிடத்தின் ஸ்திரதன்மை மிக மோசமாக உள்ளது .ஆங்காங்கே கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கம்பிகள் தெரிகிறது. கட்டிடத்தின் மேலே செடிகள் படர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதுமட்டுமில்லாமல் கீழ் தளத்திலுள்ள வங்கி மேலே உள்ள அறநிலையத்துறை தணிக்கை துறை அலுவலகம் இதற்கான படிகளும் மிகவும் பழுதடைந்துள்ளது.

இது மட்டுமல்லாது சமூக விரோதிகளின் கூடாரமாகவும் இரவு நேரங்களில் இந்த கட்டிடம் உள்ளது .மதுபானங்களை அருந்திவிட்டு பாட்டில்கள் அங்கே கிடைப்பதும் காணமுடிகிறது. படியேறி மேலே செல்பவர்கள் ஒரு சிலர்கள் தலையிலும் இந்த சிமெண்ட் காரைகள் விழுந்து உள்ளன என பொதுமக்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

எப்போது இந்த கட்டிடம் விழுமோ என்ற அச்சத்தில் பொதுமக்களும் அந்த கடைகளை நடத்தி வருவர்களும் இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கட்டிடத்தில் உள்ளவர்களை அப்புறப்படுத்தி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.கட்டிடம் இடிந்து விழுந்து பேராபத்து வரும்முன் தடுக்க வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.

Advertisement