விடுதலை போராட்ட வீரர் ஜீவானந்தத்தின் 114 வது பிறந்தநாள் புகழஞ்சலி விழா!

விடுதலைப் போராட்ட வீரர் ஜீவானந்தத்தின் 114 வது பிறந்தநாள் புகழஞ்சலி விழா திருச்சி பெரிய மிளகு பாறையில் நடைபெற்றது.

ஜனசக்தி, தாமரை, ஆசிரியரும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தை தோற்றுவித்தவருமான பொதுவுடைமைப் போராளி, பேராசான் ஜீவானந்தம் அவர்களின் 114 வது பிறந்த நாள் புகழஞ்சலி விழா நடைபெற்றது.

இவர் காந்தியவாதியாகவும், விடுதலைப் போராட்ட வீரராகவும், மகாத்மா காந்தியடிகளால் நீ தான் தம்பி இந்தியாவின் சொத்து என்று போற்றப்பட்டவர். பகத்சிங் எழுதிய "நான் ஏன் நாத்திகன் ஆனேன்" என்ற நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டமைக்கு பிரிட்டிஷ் அரசால் கைது செய்யப்பட்டவர். தொழிலாளர்கள் நலத்திற்காக பாடுபட்டவர். பொதுவுடைமைப் போராளி தமிழ் நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று முதன் முதலில் சட்டமன்றத்தில் குரல் கொடுத்த வண்ணாரப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்.

Advertisement

மேலும் எழுத்தாளர்கள், தலைவர்கள் , அறிஞர்கள், கவிஞர்கள் போற்றிய பேச்சாளர் பேராசான் என பல பரிமாணங்களில் எடுத்தவர். இவரின் திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி திருச்சியில் செலுத்தப்பட்டது.