திருச்சியில் 19.84 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள்!

திருச்சியில் 19.84 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகள்!

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான இரட்டை வாய்க்கால் வாசன் நகர் சாலை அமைக்கும் பணிக்கு இன்று பூமி பூஜை போட்டு பணிகள் துவங்கின.

தமிழக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி இரட்டைவாய்க்கால் முதல் வாசன் நகர் வரை தார் சாலை அமைத்தல் பணிகளை ரூபாய் 19.84 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை போட்டு பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வேத லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், உதவி பொறியாளர் ஆர்.செலின், சத்திரப்பட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் நவலூர் குட்டப்பட்டு செல்வம்,வேல் முத்தையன் அல்லித்துறை முன்னாள் கவுன்சிலர்,வாசன் வேலி நலச்சங்கம் ஆறுமுகம், அண்ணாதுரை,சிவகுமார் மகேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.