100 நாள் வேலை திட்டத்தில் 198 கோடி மோசடி? திருச்சி ஆட்சியரிடம் புகார்மனு:

100 நாள் வேலை திட்டத்தில் 198 கோடி மோசடி? திருச்சி ஆட்சியரிடம் புகார்மனு:

திருச்சி மாவட்டத்தில் 100 நாள் வேலைதிட்டத்தில் 3ஆண்டுகளில் 198கோடி மோசடி – மேசாடியில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்ககோரி தன்னார்வலர்கள் அமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் புகார்மனு கொடுக்கப்பட்டுள்ளது.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் நடைபெற்ற இந்த நிதி முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மக்களில் வறுமைக்கோட்டிற்குகீழ் உள்ள ஏழைமக்களின் பொருளாதா மேம்பாட்டிற்காகவும், கிராமங்கள் தன்னிறைவுஅடையவும் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுவரும் 100நாள் வேலைத்திட்டம் எனப்படும் மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்புத்திட்டத்தின்கீழ் நீர்நிலைகள் சீரமைப்பு, பண்ணைகுட்டை அமைத்தல், மரம்நடுதல் மற்றும் கிராமப்புற பணிகளுக்கு பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் திருச்சி மாவட்டத்தி;ல் 14ஒன்றியங்களில் கடந்த 2017ம் ஆண்டுமுதல் 2020ம்ஆண்டுவரையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளை சமூக தணிக்கைக்குழு ஆய்வுசெய்ததில் குறைந்தளவு மனிதசக்தியை பயன்படுத்தியும், மரக்கன்றுகள் நடுதலில் மோசடி என பல்வேறு வகைகளில் 3ஆண்டுகளில் நிதிமுறைகேடு மற்றும் நிதிஇழப்பு ஏற்படுத்தியவகையில் 198கோடி மோசடி நடைபெற்றுள்ளதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்தஅறிக்கையின்படி மோசடியில் ஈடுபட்டவர்களிடமிருந்து பணத்தை மீட்கவும், மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்ட பொறுப்பாளர்கள்மீதும், கண்காணிக்கும் அதிகாரிகள்மீதும் குற்றவழக்கு பதிவுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இன்றையதினம் தன்னார்வலர்கள் அமைப்பான 10ரூபாய் அமைப்பு சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் அதன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் மனுஅளிக்கப்பட்டது, இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதபட்சத்தில் நீதிமன்றத்தை நாடி மோசடியில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சி தலைவர் முறைகேடு குறித்து உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட உத்தரவிட்டார்.உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காலகட்டத்திலேயே கிட்டத்தட்ட 198 கோடி ரூபாய் மோசடி என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.