தீபாவளி பண்டிகையன்று 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு- 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

தீபாவளி பண்டிகையன்று 250க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு- 17 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

திருச்சி மாவட்டத்தில் உள்ள 185 டாஸ்மாக் கடைகளில் தீபாவளிக்கு முன்தினம் 9.17 கோடி ரூபாய்க்கும், தீபாவளி தினத்தன்று 8.35 கோடி ரூபாய்க்கும் என மொத்தம் இரண்டு நாட்களில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 17.52 கோடி ரூபாய் மதிப்பிலான மது விற்பனையாகியுள்ளது.

தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கு  காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் என தமிழக அரசு நேரம் ஒதுங்கி அறிவித்திருந்தது. இந்த விதிமுறைகளை மீறி திருச்சி மாநகரில் பட்டாசு வெடித்ததாக 40  வழக்குகள் பதியப்பட்டு உள்ளது. மேலும் குடிபோதையில் தகராறு, பொதுமக்களுக்கு இடையூறு, குடிபோதையில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், திருச்சி மாநகர போலீசார் 200க்கும் மேற்பட்ட வழக்குகளை பதிந்து உள்ளனர்