திருச்சியில் மாஸ்க் அணியாமல் சுற்றித்திரிந்த நபர்களுக்கு இதுவரை 5 லட்சம் அபராதம் வசூல்!

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வந்தவருக்கு ரூபாய் 5 இலட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாநகராட்சி பொது இடங்களில் முக கவசம் (மாஸ்க்) அணியாததற்கு அபராதமாக, பொதுமக்களிடமிருந்து 04.06.2020 முதல் 27.06.2020 வரை மொத்தம் ரூபாய் 4, 95238 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையின் முக்கிய அம்சமாக, முக கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் , தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் மூலம் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்று  மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தன. 

இதன்படி, கடந்த 04.06.2020 ஆம் தேதி முதல் 27.06.2020ம் தேதி வரை, திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில், முக கவசம் அணியாமல் பொது இடங்களில் வலம் வந்த ஆயிரக்கணக்கானோர் மீது அபராதம் விதிக்கப்பட்டது,இவர்களிடமிருந்து அபராதமாக தலா 100 ரூபாய் வீதம் மொத்தம் ரூபாய் 4,95238 வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.