திருச்சி விமான நிலையத்தில் 895 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில்  895 கிராம் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 46 லட்சம் மதிப்புள்ள 895 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement

துபையிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் திருச்சி வந்த பாலகணேசனிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்பொழுது தங்கத்தை உடலில் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. 

அவரிடமிருந்து 46 லட்சம் மதிப்புள்ள 895 கிராம் தங்கத்தை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.