அமமுக உடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக இல்லை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

அமமுக உடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக இல்லை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறை சார்பில் 3100 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் நிதியுதவியும் மற்றும் வருவாய் துறையின் சார்பில் 1984 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா ஆகியவற்றை சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியின் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்... அதிமுக - அமமுக கூட்டணி குறித்த கேள்விக்கு கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் அதிமுக அந்த நிலையில் இல்லை. நான் சசிகலாவை சந்திக்கும் வாய்ப்பு இல்லை. 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என கூறினார்.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM