திருச்சியில் முதியவரை தாக்கிய தலைமை காவலர்!! ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்ட ஐஜி!!

திருச்சியில் முதியவரை தாக்கிய தலைமை காவலர்!! ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்ட ஐஜி!!

திருச்சி கோர்ட் ரவுண்டானா சாலையில் வந்த முதியவரை தலைமை காவலர் ஒருவர் தாக்கிய சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று முதியவரை தாக்கிய தலைமை காவலர் இளங்கோவை ஆயுதப்படைக்கு அதிரடியாக மாற்றினார் திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜ்!

திருச்சி கோர்ட் ரவுண்டானா சாலையில் சைக்கிளில் சென்ற முதியவர் மீது, காவலர் ஒருவரின் இருசக்கர வாகனம் மோதியது, இதில் சைக்கிளில் பாதிப்பு ஆகவே காவலரிடம் முறையிடுகிறார்.இதனால் கோபமடைந்த காவலர் அந்த முதியவரை ரோட்டில் வைத்து அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. முதியவர் அடி தாங்காமல் மயக்கம் போடவே, அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Advertisement

இதுகுறித்து முதியவரை தாக்கிய காவலரை பற்றி விசாரணை நடத்துமாறு மாநகர காவல் ஆணையர் வரதராஜூ உத்தரவிட்டார். அதன்படி கோர்ட் ரவுண்டானா சாலை மற்றும் ஐயப்பன் கோயில் சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கட்டுப்பாட்டு அறையிலிருந்து போலீசார் ஆய்வு செய்தனர். இதில் அவர் உறையூர் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றும் இளங்கோ என்பது தெரியவந்தது.

இதையடுத்து காவல் உயர் அதிகாரிகள் இளங்கோவிடம் விசாரணை நடத்தியதில் அந்த முதியவர் தகாத வார்த்தைகளில் திட்டியதாகவும் அதனால்தான் அடித்தேன் எனவும் விளக்கம் தெரிவித்துள்ளார்.சீருடை அணிந்து கொண்டு பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி இளங்கோவை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து வரதராஜ் உத்தரவிட்டுள்ளார். இன்றுடன் திருச்சி மாநகர காவல் ஆணையர் வரதராஜ் ஓய்வு பெறுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.