திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும்  பழைய இரும்பு கடை கிடங்குகளுக்கு தீ தடுப்பு குறித்து கலந்தாய்வு  கூட்டம்   

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும்  பழைய இரும்பு கடை கிடங்குகளுக்கு தீ தடுப்பு குறித்து கலந்தாய்வு  கூட்டம்   

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும்  பழைய இரும்பு கடைகள், பழைய காகித கடைகள், நெகிழி கடைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றில் கடைகள் பராமரிப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்த கலந்தாய்வு  கூட்டம் 18.02.2021 அன்று மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் தலைமையில், மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.  

மேலும் மேற்படி கூட்டத்தின் போது எதிர் வரும் கோடை காலங்களில் தீப்பற்றாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தீ தடுப்பு ஒத்திகை ஆகியவை தீயணைப்பு துறையினரால் செய்து காண்பிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகர மக்கள் தங்கள் வீடுகளில் சேகரமாகும் குப்பையை பிரித்து பெற வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் தீயணைப்பு உபகரணங்களை தங்களது கடைகளில் நிறுவுவதாக உறுதியளித்தனர்.  அனைத்து கடைகளும் அச்சம் மற்றும் அருவருக்கத்தக்க தொழில் உரிமம் பெற்று நடத்த தெரிவிக்கப்பட்டது.  உரிமம் பெறாத கடைகள் இயங்க அனுமதிக்கப்படமாட்டாது எனவும் மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.         

இதில் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன்,  நகர் நல அலுவலர் டாக்டர். எம். யாழினி, தியாகராஜன், நிலைய அலுவலர், தீ தடுப்பு குழு, தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் காயலாங்கடை வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM