திருச்சியில் அனைத்து துறை அதிகாரிகளையும் அலற வைக்கும் கொரோனா!!

திருச்சியில் அனைத்து துறை அதிகாரிகளையும் அலற வைக்கும் கொரோனா!!

திருச்சியில் தற்போது கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மிகப்பெரிய பீதியை உருவாக்கி வருகிறது.குறிவைத்தது போல திருச்சியில் உள்ள அனைத்து துறை அதிகாரிகளையும் விட்டுவைக்காமல் கொரோனா தாக்கி வருகிறது. இது குறித்த ஒரு சிறப்பு அலசல்!

வருவாய்த்துறை, காவல்துறை, ஊடகத் துறை என பல துறைகளை நிலைகுலைய வைத்துள்ளது கொரோனா என்ற கொடிய வைரஸ்.திருச்சி மாவட்டத்தில் கோவிட் தொற்றால் மொத்தம் 503 நபர்களில் 302 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 197 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் பல துறைகளை சார்ந்தவருக்கு கொரோனா கொடூரமாக அதிகரித்து வருவது என்பது துறைகளைச் சார்ந்த பலரை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.வருவாய் துறையில் சோமரசன்பேட்டை விஏஓ க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலக ஊழியர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதும், நேற்று செய்தியாளர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் காக்க பணியில் ஈடுபட்டு வரும் திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலைய ரோந்து வாகன சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கும், ஓட்டுனர் ஒருவருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் இதுவரைக்கும் திருச்சியில் 25 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கன்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷனை பொறுத்தவரை நேற்று கொரோனா பரிசோதனை உறுதி செய்யப்பட்ட நிலையில் அங்கு உள்ள போலீசார் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுபோல திருச்சியில் பல துறைகளில் உள்ள பலரை கொரோனா தொற்றி வருகின்ற நிலையில் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியான ஒன்றாக உள்ளது.

எனவே அனைத்து துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வது என்பது அவர்கள் கையில்தான் உள்ளது.