மாநகராட்சி நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவிக்கும் DYFI அமைப்பினர் - அய்யோ....அய்யோ!!
Advertisement
திருச்சி மாநகராட்சி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த நிலையில் நாளடைவில் அது தொடர்ந்து மந்த நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் ஆங்காங்கே கொட்டப்பட்டும், கழிவுநீர் சாலையில் கலந்துவிடும் காட்சியை தான் தற்போது நாம் பார்க்க முடிகிறது.
Advertisement
இதனைத் தொடர்ந்து திருச்சி உறையூர் பாண்டமங்கலம் பகுதியில் குப்பைகள் அகற்றாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனை மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாத நிலையில் DYFI பாண்டமங்கலம் பகுதி அமைப்பினர் குப்பைகளை அகற்றாத மாநகராட்சிக்கு "தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படும் திருச்சி மாநகராட்சிக்கு மிக்க நன்றி" என கிண்டலாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும் எனவும் DYFI அமைப்பினர் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd