தீபாவளி இறுதிகட்ட விற்பனை- மனித தலைகளாக காட்சியளிக்கும் திருச்சி என்.எஸ்.சி போஸ் ரோடு

தீபாவளி இறுதிகட்ட விற்பனை- மனித தலைகளாக காட்சியளிக்கும் திருச்சி என்.எஸ்.சி போஸ் ரோடு

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் திருச்சியின் பிரபல கடைவீதியான Nscb சாலை  மனித தலைகளாக காட்சியளிக்கிறது. கோவிட் தொற்று இருப்பதை மறந்து பொதுமக்கள் அதிக அளவில் கடைவீதிகளில் பண்டிகைக்காக பொருட்களை வாங்கி வருகின்றனர் . 

தொடர்ந்து மாவட்ட நிர்வாகம்,மாநகர காவல்துறை ,மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் பொதுமக்கள் அதிகம் கூடி வருகின்றனர். 

கடைவீதிகளில் முககவசம் அணியாமல் வருபவரிடம் 200 ரூபாய் அபராதம் என ஏற்கனவே மாநகர காவல் லோகநாதன் ஆணையர் அறிவித்திருந்தார்.

இன்றுவரை முகக்கவசம் அணியாமல் ஷாப்பிங் செய்ய வந்த 3,000 பேரிடம் தலா 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

திருச்சி என்.எஸ்.சி .போஸ் ரோடு, சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி ,சத்திரம் பேருந்து நிலையம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் மூன்று ஷிப்ட் முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.200க்கும் மேற்பட்ட கேமராக்கள், உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல்துறை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.