திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் புதிய கதவணை பணியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காவிரி ஆற்றில் கடந்த ஆண்டு பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த( 2018) ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி முக்கொம்பு மேலணை எனப்படும் கொள்ளிடம் ஆற்றின் மேல்கட்டப்பட்டிருந்த அணையின் 9 மதகுகள் உடைந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. 
திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில்  387.60 கோடி ரூபாய் செலவில் புதிய அணை கட்டுவதற்கான பணியினை தமிழக முதல்வர் கடந்த 19.02.19 அன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

நவீன தொழில்நுட்ப உதவியுடனும் 24 மாத காலத்திற்குள் இந்த அணையானது (எல்&டி நிறுவனம்) கட்டி முடிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. 387 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு  புதிய கதவணை பணிகள்  நடைபெற்று வருகிறது. இன்று புதிய கதவணையை  கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு 45 தூண்கள் பூமியிலிருந்து பாலபகுதிக்கு அமைக்கும் பணி 60% முடிவடைந்து விட்டது.காவிரியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படாது.

பிப்ரவரி 2021க்குள் கொள்ளிடம் ஆற்றில் தெற்கில் கட்டப்படும் 45 தூண்கள் அமைக்கும் பணிகளும்  புதிய கதவணை பணிகள் முடிவடையும் என தகவல் தெரிவித்தார்.