திருச்சியில் முதல் செய்தியாளர்கள் சந்திப்பு! அலட்சியம் காட்டிய பா.ஜ.க முருகன்!! வெளியேறிய பத்திரிக்கையாளர்கள்!!!

திருச்சியில் முதல் செய்தியாளர்கள் சந்திப்பு! அலட்சியம் காட்டிய பா.ஜ.க முருகன்!! வெளியேறிய பத்திரிக்கையாளர்கள்!!!

திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் பாஜகவினர் சீனாவுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக் கொள்வார்கள் என்று பா.ஜ.க மாநில தலைவர் முருகன் செய்தியாளர் சந்திப்பு இன்று காலை 10 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டுருந்தது. உறுதிமொழி ஏற்றுக் கொண்டவுடன் நேராக ஹோட்டலுக்குள் சென்று விட்டார்.

திருச்சி பத்திரிக்யாளர்கள் மற்றும் நிருபர்கள் பேட்டிக்காக காத்திருக்கையில் 11:30 வரை செய்தியாளர் சந்திப்பு தொடங்காத காரணத்தால் சந்திப்பை பத்திரிக்கையாளர்கள் புறக்கணித்தனர்.பாஜக தலைவராக முருகன் பொறுப்பேற்று திருச்சியில் நடந்த முதல் செய்தியாளர் சந்திப்பை அலச்சியப்படுத்தியது செய்தியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காலதாமதம் ஆக்கியதால் வெறுப்பாகி பத்திரிக்கையாளர்கள் வெளியேறினார்கள்.