பெல் நிறுவன செக்யூரிட்டிகளால் தரக்குறைவாக நடத்தப்படும் பகுதிவாழ் மக்கள் – நடவடிக்கை எடுக்குமா நிர்வாகம்?

பெல் நிறுவன குடியிருப்பு பாதைகளை அடைத்து வைத்துள்ளதால் அருகில் வசிக்கும் மக்கள் 5 முதல் 10 கிலோ மீட்டர் வரை சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

நுழைவு பகுதியில் செல்லும் மக்களை செக்யூரிட்டி பணியில் உள்ளவர்கள் தரக்குறைவாகவும், மரியாதையின்றியும் நடத்துவதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.

பெல் நிறுவன ஊழியர்கள் அருகில் உள்ள பகுதியில் இருக்கக்கூடிய வணிக நிறுவனங்களையும், காய்கறி கடைகளையும் பயன்படுத்தியே தங்களுடைய அத்தியாவசிய பொருட்களை பெருமளவில் வாங்கி வரும் நிலையில் அப்பகுதி மக்களை செக்யூரிட்டி என்ற பெயரில் தரக்குறைவாக நடத்துவது என்பது மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது மாதிரியான போக்கை பெல் நிறுவன செக்யூரிட்டிகள் தவிர்க்க வேண்டும் அவ்வாறு இல்லையெனில் தங்கள் பகுதிக்குள் பெல் நிறுவனத்தை சார்ந்த யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற கொந்தளிப்பில் உள்ளனர் மக்கள்.