நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் துபாய்  சென்னை பெங்களூரு இன்டிகோ விமான சேவைகள் ரத்து

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக திருச்சி விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் துபாய்  சென்னை பெங்களூரு இன்டிகோ விமான சேவைகள் ரத்து

திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு இன்டிகோ நிறுவனத்தின் சார்பில் உள்நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.   தற்போது நிவர் புயல் காரணமாக திருச்சியில் இருந்து இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்படுவதாக இன்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

இந்த நிலையில் திருச்சியில் இருந்து இரவு 9.45 மணிக்கு சென்னைக்கு இயக்கப்பட விருந்த விமான சேவை, இன்று காலை 8.15 மணிக்கு சென்னைக்கு இயக்கவிருந்த விமான சேவை, காலை 9.20 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட இருந்த விமான சேவை, இரவு 7 மணிக்கு பெங்களூருக்கு இயக்கப்பட இருந்த விமான சேவை, மேலும் இரவு 9.45 மணிக்கு சென்னைக்கு இயக்கவிருந்த விமான சேவை மற்றும் 7:10 மணிக்கு துபாய் நோக்கி செல்லவிருந்த விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக இன்டிகோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 மறு அறிவிப்பு வரும் வரை இந்த சேவைகள் இயக்கப்படாது என கூறப்பட்டுள்ளது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறியhttps://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm