இருங்களூர் ஊராட்சி மன்றம் சார்பில் இரண்டாம் நிலைக்காவலருக்கான இலவச பயிற்சி- 140 மாணவ மாணவிகள் பங்கேற்பு 

இருங்களூர் ஊராட்சி மன்றம் சார்பில் இரண்டாம் நிலைக்காவலருக்கான இலவச பயிற்சி- 140 மாணவ மாணவிகள் பங்கேற்பு 

திருச்சி மாவட்டம்,  இருங்களூர் ஊராட்சி மன்றம் சார்பில் இரண்டாம் நிலை காவலருக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்து சுமார் 140 பேர் கலந்துகொண்டனர். 

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலைக் காவலருக்கான 10,600 பதவிகளுக்கான  காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 13 ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. 

இத்தேர்வில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவ மாணவிகளுக்கான அனைத்து பயிற்சியினையும், இருங்களூர் ஊறாட்சி மன்றம் சார்பில் இலவசமாக வழங்க அம்மன்றத்தின் தலைவர் வின்சென்ட் முடிவு செய்து, அதற்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் உடற்திறன் பயிற்சி மைதானம் அனைத்தும் இருங்களூர் ஊராட்சியில் உள்ள  செயின்ட் ஜான்ஸ் மேல்நிலைப் பள்ளியில்  நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த பயிற்சியானது கடந்த அக்டோபர் 13 ம் தேதி துவங்கியது. இப் பயிற்சி வரும் டிசம்பர் 12 ம் தேதி வரை நடைபெறுகிறது. 

மேலும்,இந்த பயிற்சியினை 6 ஆசிரியர்கள் தினசரி காலை 6 மணிமுதல் மதியம் 1 மணி வரை நடத்துகின்றனர். இதில் காலை 6 மணி முதல் 8 மணி வரை உடற்திறன் பயிற்சியும், காலை 8 மணி முதல் 9 மணி வரை காலை உணவும், காலை 9 மணி முதல் 1 மணி வரை எழுத்துத் தேர்விற்கான தமிழ், அறிவியல், சமூகவியல், உலவியல், ஆங்கிலம், பொது அறிவு, ரிசனிங் அபிலிட்டி (கனிதம்)  போன்ற வகுப்புகளை அரசுக் கல்லூரியில் மற்றும் அரசுப் பள்ளியில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இலவசமாக நடத்துகின்றனர். அதே போல உடற்திறன் பயிற்சியினை காவல்துறையில் பணியாற்றும் இளம் காவலர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும் 100, 600, 1,200 மீட்டம் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்,  கயிறு ஏறுதல், தியானப் பயிற்சி ஆகியவற்றினை இலவசமாக நடத்துகின்றனர்.