திருச்சி மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 700 கொரோனா பரிசோதனைகள் மட்டும்தானா?

திருச்சி மாவட்டத்திற்கு நாள் ஒன்றுக்கு 700 கொரோனா பரிசோதனைகள் மட்டும்தானா?

கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் மிக வீரியத்துடன் அதிகரித்து வருகிறது. திருச்சியில் நேற்று மட்டும் 83 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியை பொறுத்தவரை 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தமிழகத்தின் மையப் பகுதியாகவும் இருந்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்துவது என்பதை விட சமூக பரவலை தடுக்காமல் இருக்க பரிசோதனைகள் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனா பரிசோதனை திருச்சியில் நாளொன்றுக்கு 300 முதல் 700 பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. இது மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்டது மட்டுமே.திருச்சி மாவட்டத்திற்கே 300 முதல் 700 பரிசோதனைகள் என்பது மிகுந்த கேள்விக்குறியான ஒன்றாக உள்ளது.

Advertisement

நேற்று முதல்வருடன் ஆலோசித்த மருத்துவக் குழுவும் கொரோனா அதிகமாக பரவி வருவதால் திருச்சியும் அதிக பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தமிழக அரசிடம் கேட்டு பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே வரும் காலங்களில் விரைவாக நடவடிக்கை எடுத்து நாளொன்றுக்கு 2000க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், உடனடியாக அதிகப்படுத்தி பொதுமக்களுக்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும் கூட!