அநாகரிகமாக அவதூறு பரப்பும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

அநாகரிகமாக அவதூறு பரப்பும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும்- அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

திருச்சி விமான நிலையத்தில் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் , மின்சார துறை அமைச்சர் தங்கமணி இருவரும் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,  "அமைச்சர் துரைகண்ணு இறப்பில் மர்மம் இருப்பதாக அநாகரிகமான வார்த்தைகளை அள்ளி தெளிக்கும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் மீது சட்ட ரீதியாக வழக்கு தொடரப்படும். மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு தங்களுடைய ஆட்சியில் நிறைவேற்றபட்டுள்ளது. அப்படி இருக்கும் போது எதிர்கட்சி தலைவர் இதுகுறித்து விமர்சிக்க காரணம் என்ன? யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது?" என்றுு சாாடினார்.

மேலும்,

"கொரோனாதடுப்பில் தங்களுடைய அரசு மிக வேகமாகவும் , முனைப்புடனும் செயல்பட்டு கொரோனா வின் இரண்டாவது அலை மற்ற மாநிலங்களில் துவங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் கட்டுபடுத்த பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனை வெற்றி அடைந்துள்ளது. இரண்டாம் கட்ட சோதனையும் வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பண்டிகை காலங்களில் மக்கள் சுய கட்டுபாடுடன் நடந்து கொண்டால் இந்த 2வது அலையில் இருந்து தப்பிக்கலாம் அதுவும் மக்கள் கையில் உள்ளது" என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.