திருச்சி தேசிய கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா:

திருச்சி தேசிய கல்லூரியில் புத்தக வெளியீட்டு விழா:

திருச்சி தேசிய கல்லூரியில் இன்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆங்கிலத் துறைத்தலைவர் இளவரசு அவர்களின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

கல்லூரியின் செயலாளர் ரகுநாதன் புத்தகங்களை வெளியிட்டார். ஆங்கிலத்துறை தலைவர் இளவரசு எழுத “AT THE HELM,A MEMOIR” மற்றும் “THE ART OF PUBLIC SPEAKING,ENGLISH FOR EFFECTIVE COMMUNICAION” போன்ற ஆறு ஆங்கில புத்தகங்களும் “வலியின் ஓசை” என்ற தமிழ் புத்தகமும் வெளியிடப்பட்டன. வெளியீட்டு விழாவில் சமஸ்கிருத துறை அனந்தநாராயணன் தமிழ்துறை ஈஸ்வரன் ஆங்கிலத்துறை சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

நூலினை குறித்து இளவரசு அவர்கள் “ஆறு ஆங்கில புத்தகங்களும் ஆங்கிலத்தை எளிதில் கற்றுக்கொள்ள துணைபுரியும் என்றும் மேலும் அவர் இயற்றிய வலியின் ஓசை பல கவிதைகளை உள்ளடக்கியது” என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த புத்தக வெளியீட்டு விழாவில் நூலகத்துறை தலைவர் சுரேஷ்குமார் மற்றும் கல்லூரியின் அனைத்து துறைகளில் இருந்தும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

✒திவ்யா செல்வம்
(பயிற்சி பத்திரிகையாளர்)