இசையால் மருத்துவம்! அசத்தும் மருத்துவர்!! உலக இசை தின ஸ்பெஷல்!!!

இசையால் மருத்துவம்! அசத்தும் மருத்துவர்!! உலக இசை தின ஸ்பெஷல்!!!

இசை என்பது அனைத்து தரப்பினரையும் கவர்ந்து இழுக்கக் கூடிய ஒன்று.இன்பத்திலும் துன்பத்திலும் சோகத்திலும் துயரத்திலும் மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்து வரும் ஒரு உயிர் துடிப்பு என கூட சொல்லலாம்.

இசை கேட்டால் புவி அசைந்தாடும், இசை ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் உலகில் எவரும் இல்லை. இசை வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட ஒன்று. நமது எண்ணம், செயல்கள் மற்றும் நினைவுகள் ஆகியவை அடங்கிய உணர்வுபூர்வமானது. பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் இசை திகழ்கிறது. இசையில், வரும் தலைமுறையினருக்கு ஆர்வத்தை அளிக்கவும், இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஜூன் 21ம் தேதி உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது.
இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் இன்று உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சென்னை காவேரி மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் பாலாஜி கிருஷ்ணனிடம் பேசினோம். இசைக்கும் இவருக்கும் ஏற்பட்ட சுவாரசியமான தொகுப்பை திருச்சி விஷன் இணையதளம் உங்களுக்கு விளக்குகிறது.

டாக்டர் பாலாஜி கிருஷ்ணன்.

இசை குறித்து பேசுகையில் நாங்கள் மிகப்பெரிய வியப்பை அடைந்தோம். மருத்துவராக இருந்து இசையிலும் தன்னுடைய கால் பாதத்தை பதித்த அவருடைய நேரடி அனுபவத்தை இங்கே பதிவு செய்கிறோம். அவர் பேசுகையில்… “இசையை ரசிக்காதவர்கள் இந்த உலகத்தில் யாருமே இல்லை. இசைதான் இவ்வுலகத்தில் உள்ள ஒவ்வொருவர்களின் இதயத்துடிப்பு! நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நிகழ்வுமே இசையால் அமைகின்றன. நாம் நடப்பது, மூச்சு விடுவது, பேசுவது என அனைத்திலுமே ஒரு இசை கலந்துள்ளது. இசையைப் பொறுத்தவரை இரண்டு வகையில் கூறலாம் ஒன்று ஸ்ருதி, இன்னொன்று லயா. நாம் பாடும்போது கேட்பது ஸ்ருதி. லயா என்பது பீட். இது இரண்டும் சேர்ந்து வருவதுதான் இசை.

இந்த இசையை வைத்து மருத்துவத்தில் என்னென்ன நோய்கள் எல்லாம் குணப்படுத்த முடியும் என்பதை பல காலமாக ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு மியூசிக் தெரபி என்று பெயர். நோய்க்கான முழுமையான மருந்து கொடுக்காவிட்டாலும் இதுபோல இசைகளை கொடுத்தால் கண்டிப்பாக ஒரு நல்ல பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். மியூசிக் தெரபி என்பது ஒரு ராகம். சங்கீதத்தைப் பொறுத்தவரை ஏழு ஸ்வரங்கள் இருக்கிறது. அதை வேறு வகையில் பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஒவ்வொரு ஸ்வரங்களும் ஒவ்வொரு பலனைக் கொடுக்கும்.

நமது உடம்பில் பல வகையான மாற்றங்கள் உண்டு. என பல இசைகள் உண்டு.இந்த மாதிரியான காலகட்டங்களில் கண்டிப்பாக இந்த இசைகள் நம்முடைய மனதிற்கு மகிழ்ச்சி தரும் ஒன்றாக அமையும். என்றார்

மேலும் அவர் நான் 5ம் வகுப்பு படிக்கும்போது கர்நாடிக் இசையில் ஆர்வமாக இருந்தேன். சிறுவயதில் பல மேடை நிகழ்வுகளில் கலந்து கொண்டேன். பின்பு மருத்துவத்தில் வந்துவிட்டேன். இசையில் எப்போதுமே கண்டிப்பாக எனக்கு ஈடுபாடு உள்ளது என்கிறார் டாக்டர் பாலாஜி கிருஷ்ணன்.

செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் இசையால் இணைந்த மனங்களை இந்நாளில் பாராட்டுவதை பெருமிதம் கொள்வோம். டாக்டர் பாலாஜி கிருஷ்ணனுக்கு திருச்சி விஷன் சார்பாக இசை தின வாழ்த்துக்கள்.