இளந்தளிர் அறக்கட்டளை தோட்டத்தில் மியாவாகி அடர் குறுங்காடு உருவாக்கம்

இளந்தளிர் அறக்கட்டளை தோட்டத்தில் மியாவாகி அடர் குறுங்காடு உருவாக்கம்

திருச்சியின் புறநகர்ப் பகுதியில் முதன் முறையாக மணிகண்டம் இளந்தளிர் அறக்கட்டளை தோட்டத்தில் மியாவாகி அடர் குறுங்காடு உருவாக்கம் விழா கடந்த வாரம்‌ நடைபெற்றது. 

தண்ணீர் அமைப்பு, மாரல் பவுண்டேசன், இளந்தளிர் அறக்கட்டளை, அய்மான் மகளிர் கல்லூரி, இணைந்து 20 வகையான 430 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

இளந்தளிர் அமைப்பின் இயக்குநர், அருள் தந்தை சூசை அலங்காரம் தலைமையில் நடைபெற்றது.

மாரல் பவுண்டேசன் விவேகானந்தன், தம்பி ராபின் , MAM திரு. பன்னீர்செல்வம், அய்மான் மகளிர் கல்லூரி பேராசிரிர்கள் , 30 மாணவர்கள், இடைமலைப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர் திருமதி.புஷ்பலதா ,RC மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மணிகண்டம் பஞ்சாயத்து தலைவர், உள்ளிட்ட அருள் தந்தையர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.