தமிழகத்தில் முதன் முறையாக போத்து முறையில் உருவாகும் வனத் திருவிழா

தமிழகத்தில் முதன் முறையாக போத்து முறையில் உருவாகும் வனத் திருவிழா

தமிழகத்தில் முதன் முறையாக நவல்பட்டு காவல் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் போத்து முறையில் உருவாகும் வனத் திருவிழா நேற்று நடைபெற்றது.

ஆலம் போத்துகள், அரசம் போத்துகள் , வாதநாராயணன் மர போத்துகள் என சுமார் 450 போத்துகள் தண்ணீர் அமைப்பு மற்றும் மாரல் பவுண்டேசன் சார்பில் இரு நாட்கள் (08.11.2020,09.11.2020) நடவு செய்யப்பட்டது .

இந்நிகழ்வை திருச்சி மாநகரக் காவல் துணை ஆணையர் திரு .வேதரத்தினம் தொடங்கி வைத்து ஆலம் போத்துகள் நட்டு வைத்தார்.

பயிற்சிப் பள்ளியின் முதல்வர் திரு.முத்துக் கருப்பன் தலைமையில் கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் கி.சதீஷ்குமார், மாரல் விவேகானந்தன் ஒருங்கிணைப்பில் காவலர் சிலம்பம் அரவிந்த், தலைமைக்காவலர் சிவக்குமார் , பேரா.தி.நெடுஞ்செழியன் ஆகியோர் மற்றும் பயிற்சிக் காவலர்கள் 400 பேர் பங்கேற்று நடவு செய்தனர்.