நிவர் புயலால் திருச்சி மாநகரில் பேரிடரை எதிர்கொள்வதற்காக மாநகர காவல் துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

நிவர் புயலால் திருச்சி மாநகரில் பேரிடரை எதிர்கொள்வதற்காக மாநகர காவல் துறை சார்பில் அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.

‘நிவர்’ புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்க தயாராக பேரிடர் மீட்பு பயிற்சி பெற்ற  தீயணைப்புத் துறையினருடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மேலும் மாநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களை பேரிடர் காலத்தில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு அந்தந்த பகுதியில் உள்ள 21 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அடையாளம் காணப்பட்டு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கிழக்கு பகுதியில் 6 பள்ளி மற்றும் கல்லூரிகள். திருச்சி மேற்கு பகுதியில் 14 பள்ளி மற்றும் கல்லூரிகளும், 

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் 1 மாநகராட்சி ஆரம்ப்பள்ளி ஆகிய இடங்கள் வருவாய் துறை மற்றும் மாநகராட்சி மூலம் தயார் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி மாநகரில் பேரிடர் காலத்தில் பொதுமக்களின் நலனுக்காக பேரிடா் 
மேலாண்மை பயிற்சி முடித்த 66 காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் (பெண் காவலர்கள் உட்பட), தீயணைப்புத்துறையினரிடம் 36 வகையான 
உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் புயல் சேதம், வெள்ள சேதம் மற்றும் பேரிடர் மேலாண்மைக்கென தனியாக கட்டுப்பாட்டு அறை திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

இதன் தொலைபேசி எண் : 0431-2331929. 
பொதுமக்கள் ஏதேனும் பாதிப்பு குறித்து வாட்ஸ்அப் வசதியுடன் கூடிய கைபேசி எண் 96262-73399 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். முன்கள பணியாளர்களாக 
பயிற்சி முடித்த மற்றும் நீச்சல் வீரர்கள் (காவலர்கள்) மேற்படி 66 பேர் அடையாளம் 
காணப்பட்டு அவர்கள் பேரிடரை திறமையான முறையில் எதிர்கொள்வது பற்றி திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் காவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.